Skip to main content

கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப்

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப்

வடகொரிய அதிபரை பைத்தியக்காரர் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 



நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என எச்சரித்தார். இதையடுத்து, முன்னெப்போதும் இல்லாதவாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிறுக்குத்தனமாக பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

இன்று காலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வடகொரியாவைச் சேர்ந்த, தன் மக்கள் பட்டினியாலும், கொலைகளாலும் பாதிப்பை சந்திக்கும்போது கண்டுகொள்ளாத பைத்தியக்காரரான கிம் ஜாங் உன், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சோதனைகளைச் சந்திப்பார்’ என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, வடகொரியா தரப்பிலிருந்து பசுபிக் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த அணுஆயுத சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்