Skip to main content

இந்தியர்களுக்கு இலவச விசா... விமான நிலையத்திற்கு வந்த பிறகு பெற்றுக்கொள்ளலாம்.. சுற்றுலா துறையை முன்னேற்ற இலங்கை முயற்சி...

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கையில் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது.

 

srilanka announced for on arrival visa for indians

 

 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து இந்தியா, சீனா உள்ளிட்ட 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச விசா மற்றும் இலங்கைக்குள் வந்து விசா பெற்றுகொள்ளும் முறை உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி வைத்தது இலங்கை அரசு. தற்போது இயல்புநிலை திருப்பியதையடுத்து இந்த திட்டத்தை மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, அந்த திட்டம், மீண்டும் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கே நேற்று அறிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட 39 நாடுகளுக்கும் இந்த சலுகையை நீட்டிப்பதாக அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்