கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. அதைப்பற்றி பதிவிட்டதுமே நெட்டிசன்கள் ஐயோ, நாம அங்க இல்லாம போய்ட்டோமே, இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
அமெரிக்காவிலுள்ள ஜார்ஜிய மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் நடந்த சம்பவம்தான் இதற்கு காரணம். சிலநாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் பணமழை பெய்தது. ஆம் அங்கு நின்று பார்த்தவர்கள் அனைவரும் அவ்வாறே எண்ணினர். அவர்களில் பலர் ஆச்சர்யமடைந்ததுடன் நிறுத்திக்கொள்ளாமல் அந்த பணத்தை எடுத்துக்கொள்ளவும் செய்தனர்.
இந்த விஷயம் அங்கிருந்த காவல்துறைக்கு செல்ல அவர்கள் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் தெரிந்தது. அவ்வழியாக சென்ற ஒரு ட்ரெக்கிலிருந்து பணம் சிதறியுள்ளதை கண்டுபிடித்தனர். இந்த நிகழ்வில் பறிபோனது மொத்தம் 1,75,000 அமெரிக்க டாலர்கள் இதன் இந்திய மதிப்பு கிட்டதட்ட 1 கோடியே 20 இலட்சமாகும். மேலும் அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த போஸ்ட்களை பார்த்த நெட்டிசன்கள் ஐயோ நான் அந்த இடத்துல இல்லாம போய்ட்டேனே என வருந்தி ட்வீட் செய்துவருகின்றனர்.
டன்வூடி காவல்துறையினர் இதுவரை 5 பேர் பணத்தை மீண்டும் ஒப்படைத்துள்ளதாகவும், 1,75,000 டாலர்களில், 4,400 டாலர்கள் திரும்ப வந்துள்ளதாக தெரிவித்தனர். என 11 அலைவ் நியூஸ் என்ற செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஜோ ஹென்கே தெரிவித்துள்ளார்.
The $175,000 on 285 in Dunwoody story has gone international. I was just on-air with the morning radio show folks from @TripleMMelb in Melbourne, Australia. Full audio of interview: https://t.co/eTaJPmFI19 #11Alive ? ? ? pic.twitter.com/mPS5eVpI5R
— Joe Henke (@JoeHenke) July 10, 2019