Published on 23/06/2018 | Edited on 23/06/2018
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் மிகவும் பரப்பரப்பான பகுதியான சேரிங் கிராஸ் சுரங்க ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒருவர் தெரிவித்ததால் பொதுமக்கள் சிதறி ஒடினர்.
இந்த ரயில் நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது, அங்கிருந்த ஒருவர் திடீரென ரயில் பிளாட்பார்ம் பகுதிக்குச் சென்று தம்மிடம் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன பயணிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து அவரை பிடித்தனர். அவரை சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், அவர் ஒரு மனநோயாளி என்பதும் தெரியவந்தது.