Published on 28/09/2018 | Edited on 28/09/2018

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் ஜாவத் ஷரிப்கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் தடையை மீறி ஈரனிடம் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்குமா? என்று முகமத் ஜாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜாவத்,” கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பொருளாதார ரீதியாக தொடர்ந்து எங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும். இதே மாதிரியான கருத்தைதான் இந்திய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எரிபொருளை பொறுத்தவரையில் ஈரான் இந்தியாவின் நம்பகமான சக்தியாக இருந்திருக்கிறது. நாங்கள் இந்தியாவுடனான உறவை விரிவாக்கவே விரும்புகிறோம்” என்றார். ஈரானிடம் அதிக எரிபொருளை வாங்கும் நாடாக சீனா முதலிடத்தில் இருக்கிறது. இவர்களை அடுத்து இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.