அமெரிக்காவில் ஏராளமான வெளிநாட்டினர் கல்வி நிறுவனங்களில் படிப்பதாகக் கூறி, போலி விசாவில் தங்கியிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். எனவே அப்படி அமெரிக்காவில் தங்குபவர்களை கன்டுபிடிக்க ட்ரம்ப் நிர்வாகம் நூதன யோசனை ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி டிரம்ப் மேற்பார்வையில் ஹோம்லாந்து காவல்துறை உதவியுடன் மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் போலியான பல்கலைக்கழகத்தை உருவாக்கியது. இதில் எந்த பாடத் திட்டங்களோ அல்லது வகுப்புகளோ கிடையாது. ஆனால் அவர்கள்படிப்பதுபோல கணக்கு மட்டும் காட்டப்படும். இதனை அறிந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் இதில் மாணவர்களாக சேர பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இப்படி பதிவு செய்வதன் மூலம் எஃப் 1 விசாவை நீட்டித்து அமெரிக்காவிலேயே தங்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.
இவர்களில் 130 பேரை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 130 பேரில் 129 பேர் இந்தியர்கள். மற்றொருவர் பாலஸ்தீனியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.