படகில் உலகம் சுற்றும் 6 இந்திய பெண்கள்!
இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண் அதிகாரிகள் ஐஎன்எஸ்வி தாரிணி என்ற 57 அடி நீள படகில் கோவாவில் புறப்பட்டு ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, தென்னாப்பிரிக்கா வழியாக மீண்டும் கோவா வந்து சேரும் வகையில் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தக் குழுவுக்கு வர்திகா ஜோஷி தலைமை ஏற்றிருக்கிறார். தங்களுடைய பயணம் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று நம்புவதாக இவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் 7 மாதங்கள் 21 ஆயிரத்து 600 கடல்மைல்கள் பயணித்து புறப்பட்ட இடத்துக்கு வருவார்கள்.
இந்தியப் பெண்கள் இதுபோன்ற பயணத்தை தொடங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.