இன்று உலகம் முழுவதும் உலக உணவு தினம் கொண்டாடப்படும் நிலையில் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 30.3 புள்ளிகளுடன் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. 30.3 என்பது மிக மோசமான நிலை என குறிக்கப்படுவதாகவும். பொதுவாக இந்த பட்டினி குறீயிட்டை கண்டறிய நான்கு முக்கியக் காரணிகள் கணக்கிடப்படுகின்றன.
முதலாவதாக ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள, சரிவிகித உணவு கிடைக்கிறதா..? என்பது,
இரண்டாவது, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டிருக்கிறார்களா என்பது,
மூன்றாவது, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பது ஆகும்.
நான்காவதாக குழந்தைகள் இறப்பு விகிதம் கணக்கில் கொள்ளப்படும்.
இப்படி கணக்கிடப்பட்ட இந்த பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கு பின்னர் 16 நாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு பின்னால் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளது.
இவை மட்டுமல்லாமல், நைஜீரியா, கானா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் இந்த பட்டியலில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. வறுமைக்கு பெயர்போன ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் உள்ள குழந்தைகளின் நிலை மோசமாக உள்ளது இந்தியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான பட்டினி குறியீடு முழு பட்டியல்