
எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்களது விமான நிறுவன உணவு சேவை பட்டியலிலிருந்து இந்திய உணவை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.
துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் சர்வதேச பயணத்தின் போது பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் (மெனு கார்டில்) சர்வதேச உணவுகள் இடம் பெரும். அதில் இந்திய உணவுகளும் இடம்பிடித்திருந்தது. இந்த நிலையில் தனது விமான நிறுவன உணவு மெனு கார்டில் இருந்து இந்திய உணவுளை நீக்கியுள்ளது எமிரேட்ஸ்.
இதுகுறித்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு தேவைகளுக்கு ஏற்பவும் சுகாதார மாற்றத்தையும் கருத்தில் கொண்டு பயணிகளின் விருப்பத்தை கவனத்தில் ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பயணம் செய்யும் இந்து பயணிகள் விமான பயணத்தின் போது கொடுக்கப்படும் இந்திய உணவு அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த தடை அறிவிப்பிற்கு முன்பு இந்திய ஜெயின் மத உணவுகள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத அசைவ உணவுகள் என சைவ அசைவ இந்திய உணவுகள் எமிரேட்ஸ் விமான சேவை உணவு பட்டியலில் இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.