Published on 06/09/2018 | Edited on 06/09/2018

ஆப்கானிஸ்தானில் நடத்தபட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் அருகே இயங்கிவந்த ஒரு மல்யுத்த பயிற்சி கூடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தத்மீ பாத்ஸ்சி என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மல்யுத்த பயிற்சி கூடத்தில் நுழைந்த அந்த நபர்கள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அவர்களில் சில பத்திரிகையாளர்களும் அடக்கம். மேலும் இந்த தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.