Published on 09/05/2019 | Edited on 09/05/2019
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகனான ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மேகன் மார்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கடந்த திங்கட்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது.
![Harry and Meghan Name Their Son Archie Harrison Mountbatten windson](http://image.nakkheeran.in/cdn/farfuture/f9lRk00rjW7_UsSshc_g-KyRU-OR1hB3emQs9S9fTzQ/1557397611/sites/default/files/inline-images/sussex.jpg)
இதனை தொடர்ந்து இளவரசர் ஹாரி- மார்கல் இருவரும் தங்கள் குழந்தையை நேற்று மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்நிலையில் அவர்களது குழந்தைக்கு ஆர்க்கி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என பெயர் சூட்டியுள்ளனர். இந்தியாவின் முதல் வைஸ்ராயும், இங்கிலாந்து மகாராணி முதலாம் எலிசெபத்தின் சகோதரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரச குடும்ப வாரிசின் வரவை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
![duke](http://image.nakkheeran.in/cdn/farfuture/X2zQKSR_XoMV1bTrPT0a6tlnz0eThLJfvuxi1EOtmdY/1557397872/sites/default/files/inline-images/sussex-bb.jpg)