Skip to main content

ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடியின் பாசத்திற்கு கிடைத்த பரிசை பாருங்கள்...

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
penguins


டென்மார்க்கிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பென்குயின் ஜோடி ஒன்று தனது குட்டியை விட்டுவிட்டு, இருவரும் ஜோடியாக நீந்த சென்றுள்ளனர். குட்டி தனியாக இருப்பதை பார்த்த மற்றொரு ஓரினச்சேர்க்கை ஆண் பென்குயின் ஜோடி ஒன்று தன்னந்தனியாக விடப்பட்ட அந்த குட்டியை நாமே எடுத்து வளர்ப்போம் என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அந்த குட்டியையும் இந்த ஜோடி தத்தெடுத்துகொண்டது. 

 

இந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடிக்கு பெற்றோர்களாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்துள்ளதாக பூங்காவின் பராமறிப்பாளர் தெரிவிக்கிறார். அதனால், தன்னந்தனியாக இருக்கும் இந்த குட்டியை பார்த்தவுடன், இது பெற்றோர்களால் கைவிடப்பட்டிருக்கும் ஆகையால் நாமே எடுத்து வளர்ப்போம் என்கிற எண்ணத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடி முடிவு செய்து, அதை யாருக்கும் தெரியாமல் மீட்டுக்கொண்டு பாசம் காட்ட தொடங்கியுள்ளது.

 

இந்த குட்டி பென்குயினின் பெற்றோர் நீந்திவிட்டு திரும்பும்போது, இந்த குட்டியை தேடும். விரைவில் கண்டுபிடித்துவிடும் என்று சிசிடிவியில் இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த பரமாறிப்பாளர் நினைத்துள்ளார். ஆனால், நடந்ததோ வேறு. அந்த குட்டியின் பெற்றோர் நீந்திவிட்டு திரும்பியும் குட்டியை பற்றி வெகுநேரமாக கண்டுக்கொள்ளவே இல்லாமல் இருந்திருக்கிறது. 

 

பின்னர், தங்களின் குட்டியை கண்டுபிடித்தது இந்த பெற்றோர் பென்குயின் ஜோடி. குட்டியை மீட்க வந்த போது, இந்த ஓரினச்சேர்க்கை ஜோடி அவ்வளவு எளிதாக அந்த குட்டியை கொடுக்க மனம் வரவில்லை. சிறிது நேரம் கழித்தே அந்த குட்டியை கொடுத்திருக்கிறது அந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடி. சிறிது நேரமே அந்த குட்டியை தத்தெடுத்து வைத்திருந்தாலும் மிகவும் பாசமாக வைத்திருந்ததை உணர்ந்த பூங்கா பராமறிப்பாளர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஒரு பென்குயினின் முட்டையை எடுத்து இந்த ஓரினச்சேர்க்கை ஜோடியும் கொடுத்துள்ளது. தற்போது இந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடி, அந்த முட்டையை அடைகாத்து வருகிறது. இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் சிசிடிவியில் பதிவாகியிருப்பதை இந்த உயிரியல் பூங்காவுக்கான சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த பாசமான காட்சிகள் அனைத்தும் வைரலாக பரவி வருகிறது.  

   

சார்ந்த செய்திகள்

Next Story

தன்பாலின சேர்க்கைக்காக சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்; ஆப்பு வைத்த செல்போன் ஆப்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
NN

கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story

'இப்படியே போனால் 2035ல் பென்குயின்களே இருக்காது' - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

'If things continue like this, there will be no penguins by 2035'-researchers are shocked

 

குறும்புத்தனத்தாலும், விளையாட்டுத்தனத்தாலும் பார்ப்பதற்கே பரவசமூட்டும் பறக்க முடியாத பறவை இனமான பென்குயின்கள் அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

குறிப்பாக ஆப்பிரிக்க பென்குயின்கள் மிகவும் ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும் அவற்றைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க பென்குயின் என்ற ஒரு இனமே இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகளும் அதனால் இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களாலும் ஏற்கனவே மத்தி, நெத்திலி போன்ற மீன்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட கடல் பகுதிகளில் குறைந்து வருகிறது. இந்த வகை மீன்களை உணவாக எடுத்துக் கொள்ளும் பென்குயின்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே நோய், புயல் கடல், மனிதர்களால் கடலில் சேரும் மாசு என பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி பென்குயின்கள் அவதியுற்று வருகின்றன. எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆப்ரிக்க பென்குயின்களை காப்பாற்ற முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.