அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாட்நாம் தலைநகர் ஹனோயில் 9 மாடி குடியிருப்பில் மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வேளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி குடியிருப்பில் வசித்து வந்த 50 பேர் பலியாகி உள்ளனர். குறுகிய பாதையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள நிலையில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதே சமயம் தீ விபத்தில் சிக்கி குடியிருப்பில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாக நிலையில் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.