Skip to main content

ஏஜிஎஸ் குழுமத்தில் ஐ.டி ரெய்டு... 25 கோடி பறிமுதல்

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

 

ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜயிடமும், விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

 

ags

 

இந்நிலையில் இந்த வருமானவரி சோதனையில் 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில்,   200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏஜிஎஸ் குழுமத்தில் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்