கல்வியில் உலக அளவில் பிரசித்திபெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருக்கிறது. உலகத் தமிழர்களின் ஒப்பற்றப் பங்களிப்பால் இப்பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச்சங்கமானது நாடியுள்ளது.
இதற்காக, ஹூஸ்டனில் நடைபெற்ற சந்திப்பில் முதல்கட்டமாக 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர் அமெரிக்கா தமிழர்கள்!
"ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாயில் 42 கோடி தேவைப்படுகிறது. இதில் பாதித் தொகையான 21 கோடி ரூபாயை அமெரிக்க நாடு வழங்குகிறது.
மீதமுள்ள 21 கோடி ரூபாயை சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமிருந்தும் திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட நிதியை அமெரிக்கா வாழ் தமிழர்கள் வழங்கி முயற்சியை முன்னெடுத்துள்ளனர்" என்று ஹூஸ்டனிலிருந்து இதன் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை தெரிவித்தனர்.