குகையில் சிக்கி 18 நாட்கள் மரணப்போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 13 பேருக்கு ஃபிபா கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு விடுத்திருந்தது பிபா.
தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல்போயினர்.
இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் குகையில் மாயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருக்கும் இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட மீட்பு பணிகளை தொடர்ந்து முதலில் 4 பேர் அதன்பின் 4 பேர் கடைசியாக 5 பேர் என நேற்று குகையில் மரணத்தின் பிடியில் சிக்கி தவித்த 13 பேரையும் காப்பாற்றி நிம்மதி பெருமூச்சு விட்டது தாய்லாந்து அரசு. இதனால் அங்கு மகிழ்ச்சி சூழ்ந்துவந்த நிலையில் குகையில் சிக்கிக்கொண்டவர்கள் கால்பந்தாட்ட வீரர்கள் என்பதால் அவர்கள் மீட்கப்பட்டால் ரஷ்யாவில் 15-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபிபா கால்பந்தாட்ட இறுதி போட்டியை காண வரவேண்டும் என ஃபிபா அமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பட்டுள்ளதால் 15-ஆம் தேதிக்குள் முழு உடல் நலம் பெறவாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.