உலகம் முழுக்க மொத்தம் 30 மில்லியன் நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று செப்டம்பர் மாத இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து மக்கள் எல்லாம் அச்சத்தில் ஆழ்ந்திருக்க, ஹாக் செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து யாருடைய தனிப்பட்ட விவரங்களையும் ஹாக்கர்கள் எடுக்கவில்லை என்று அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்து விசாரணை நடந்துவருவதாக தெரிவித்திருந்தது. அதற்கடுத்து ஹாக் செய்யப்பட்ட கணக்குகளில் 14 மில்லியன் கணக்குகளின் தனிப்பட்ட விவரங்களான ஃபோன் நம்பர், கணக்கில் உள்ள நண்பர்கள் யார் போன்றவைகளை எல்லாம் ஹாக்கர்ஸ் திருடியுள்ளதாக அதிர்ச்சித்தகவலை அளித்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
அதன் பின் இன்னொரு அதிர்ச்சித்தகவல் வெளிவந்தது அதில் ஹாக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் எதுவும் அரசியல் நோக்கங்களுக்காக ஹாக் செய்யப்படவில்லை மாறாக நிதி சம்பந்தமாகதான் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஹாக் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் போலியான மார்க்கெட்டிங் நிறுவனங்களால் ஸ்பம் (spam) வழியில் பொய்யான நிதிதகவல்களை அளித்து, அந்த நிறுவனங்கள் மூலமாகத்தான் இந்த ஹாக் நடந்தது என்றும் அறிவித்தது. இந்த நிலையில் ஃபேஸ்புக் இறுதியாக சொன்ன நிதி சம்பந்தமாகத்தான் ஹாக் நடந்திருக்கிறது. ஃபேஸ்புக் ஹாக்கர்ஸ் 120 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் கணக்குகளில் உள்ள தனிப்பட்ட குறுந்செய்திகளை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இதில் 81,000 நபர்களின் குறுந்செய்திகளை ஏற்கனவே விற்பனை செய்யும் முனைப்புடன் இணையத்தில் வெளியீட்டுள்ளனர். அதில் ஒரு குறுந்செய்திக்கு 10 சென்ட் எனவும் அறிவித்துள்ளனர். உக்ரைன், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கணக்குகளே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.