சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண் ஒருவரின் உருவப்படம் அவர் மென்ற சுவிங்கத்திலிருந்து கிடைத்த டி.என்.ஏ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
கருமையான முகம், அடர் கருஞ்சிவப்பு நிற கூந்தல் மற்றும் நீல நிற கண்களை கொண்டிருக்கும் அந்த பெண் வேட்டையாடும் பெண்ணாக இருந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டென்மார்க்கின் பால்டிக் கடல் பகுதியில் இந்த பெண் வாழ்ந்திருக்கலாம் எனவும், அவரது உணவு பழக்கங்களில் மிகமுக்கியமானதாக ஹசல் நட்ஸ் மற்றும் மல்லார்ட் வாத்து இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உறைந்த பிசின் போன்று கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த பொருளில் இருந்த பற்களின் தடையங்களை கொண்டே அது சுவிங்கமாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். மேலும் அது பல் வலி அல்லது மற்ற நோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மனித உடலின் எந்த பாகமும் இன்றி அவர் மென்ற சுவிங்கத்தை வைத்து அதிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மரபணுவை மட்டுமே கொண்டு கோபன் ஹாகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த உருவத்தை வடிவமைத்துள்ளனர்.