தங்கள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என இங்கிலாந்தின் ப்ளைமவுத் நகரிலிருந்து செயல்பட்டு வரும் போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் (Portcullis Legals) என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பை கேட்ட அதன் ஊழியர்கள் மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் சுற்றி வருகின்றனர். அதற்கு மற்றுமொரு காரணம் கடந்த வாரம் தான் அந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கியுள்ளது. ஒரே வாரத்தில் சம்பள உயர்வு, 4 நாட்கள் வேலை, கூடிய விரைவில் போனஸ் என்று அடுக்கடுக்கான இன்ப அதிர்ச்சிகளை அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த முடிவால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அதனால் முன்பை விட உற்சாகமாக ஊழியர்கள் பணிகளைச் செய்வதாகவும், வாடிக்கையாளர்களும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சிறப்பான சேவைகளைப் பெறுவதாகக் கூறுவதாகவும் போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து நாட்டின் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் தொடங்கப்பட்ட இந்த 4 நாள் வேலை திட்டம் அங்கு வெற்றி பெற்றது. அதனை வைத்தே நாங்கள் இப்போது இதனை இங்கிலாந்தில் ஆரம்பித்துள்ளோம். 5 மாத காலம் சோதனை நடைபெறும். இது வெற்றி பெற்றால் இனி எப்போதும் இதையே பின்பற்ற முடிவெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.