Published on 19/07/2018 | Edited on 19/07/2018
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 13 பேரை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் வெர்ன் அன்ஸ்வொர்த். அந்த மீட்டுப்பணியின் பொழுது உலக புகழ்பெற்ற தனியார் ஏவுகணை மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் கொடுத்த நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்த முடியாது அது அவருடைய விளம்பரத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற வெர்ன் அன்ஸ்வொர்த் வைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ''அன்ஸ்வொர்த் சிறுவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவுகொள்ளும் பீடோகய்'' என கடுமையாக விமர்சித்திருந்தார் எலன் மாஸ்க்.
.
இப்படி ஒரு கடும் விமர்சனத்துடன் போடப்பட்ட ட்விட்டர் கருத்தை தற்போது நீக்கியுள்ள எலன் மஸ்க் இதற்காக வெர்ன் அன்ஸ்வொர்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.