விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர காலங்களில் ரத்தம் கிடைப்பது அரிய விஷயம். இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அதிகம் என ஒரு தகவல் கூறுகிறது. அதேசமயம், வளர்ந்த நாடுகளில் கூட சரியான நேரத்தில் ரத்தம் பாதிக்கப்பட்டவருக்கு கிடைப்பதில்லை.
![Drone](http://image.nakkheeran.in/cdn/farfuture/etRW8-eHI3GSWYdP2QM91eebRR7cJERsteQAwKG54YQ/1533347626/sites/default/files/inline-images/Drone.jpg)
இந்நிலையில், ஜிப்லைன் எனும் விமான சேவை நிறுவனம் தயாரித்த இரண்டாம் தலைமுறை டுரோன்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ரத்தத்தைக் கொண்டு சேர்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படவுள்ளது. சிறிய விமானம் வடிவில் இருக்கும் இந்த டுரோன் 20 கிலோ எடைகொண்டது. இது 1.75 கிலோ எடைகொண்ட பொருளை தூக்கிக்கொண்டு, மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் தூக்கிச் செல்லக்கூடியது.
இந்த விமானம் முதலில் ருவாண்டாவில் சோதனை செய்யப்பட்டு, அது பயனுள்ளதாக இருக்கும் நிலையில், அங்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஒதுபோன்ற டுரோனின் தேவையை உணர்ந்த அமெரிக்காவும் சோதனை செய்துபார்த்துள்ளது.இந்த டுரோன்கள் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவை. கூடிய விரைவில் இந்த வகை டுரோன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.