Skip to main content

ட்ரம்பின் பதிவு சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கம்... முகநூல் மற்றும் ட்விட்டர் அதிரடி

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

trump

 

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய பதிவு ஒன்று முகநூல் மற்றும் ட்விட்டரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன .

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் நடக்கின்ற நிகழ்வுகள் மற்றும் கரோனா பாதிப்புகள் குறித்தான தகவல்கள் என அனைத்தையும் சமூகவலைத்தளங்கள் வழியாகத்தான் மக்கள் கண்டு வருகின்றனர். இக்கரோனா காலத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் இதனால் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் கரோனா குறித்தான பல்வேறு போலியான தகவல்கள் பரவி வந்தன. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து சமூகவலைத்தள நிறுவனங்களும் தாமாகவே முன்வந்தன. முகநூல் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

 

அந்த வகையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு காணொளியை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் "கரோனா குழந்தைகளை எளிதில் தாக்காது, அவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்றும் பெற்றோர்களுக்கு அவர்கள் மூலம் பரவ வாய்ப்பில்லை" என்றும் கூறியிருந்தார். உலக சுகாதார நிறுவனம் குழந்தைகள் மூலம் நோய்ப் பரவ வாய்ப்பிருக்கிறது என முன்னர் குறிப்பிட்டிருந்தது. எனவே ட்ரம்ப் பதிவினை பலரும் கண்டித்தனர். ட்ரம்ப் கூறியது தவறான தகவல் என்பதை உறுதிசெய்துவிட்டு முகநூல் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் அந்தப் பதிவை அதிரடியாக நீக்கியுள்ளன.    

 

 

சார்ந்த செய்திகள்