Skip to main content

''தமிழை, தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள்''-துபாய் வாழ் தமிழர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

dmk

 

அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

நேற்று துபாயில் அந்நாட்டு ஊடகங்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாடு வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அமைந்த மாநிலம். கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலம். 2030 ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற தொலைநோக்குடன் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும்,சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளது. வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. எல்லோரும் பயனடைவோம் என்று இந்த தருணத்தில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்'' என்றார்.

 

முதல்வரின் இந்த துபாய் பயணத்தில் துபாய் வாழ் தமிழர்களிடையே பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாய் வாழ் தமிழர்களிடையே இன்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ''தமிழை, தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள், சாதியாக, மதமாக உங்களைப் பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள். தமிழால் நாம் இணைந்தால் நம்மை யாராலும் மதம், சாதியால் பிரிக்க முடியாது'' என பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்