Skip to main content

'இந்தியாவை 22 கூறுகளாக உடைப்போம்' பாக்., அமைச்சர் திமீர் பேச்சு!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

தீவிரவாதத்தை கைவிடும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று இந்தியா அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இதுதொடர்பாக இந்தியாவுக்கு பல்வேறு விதங்களில் நெருக்கடியை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் மூன்றாவது நாட்டின் உதவியையும் நாடி பார்த்தது. அதற்கும் தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது 'பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியா 22 கூறுகளாக உடையும் என்றும் பாகிஸ்தானிடம் 150 கிராம் முதல் 250 கிராம் எடை கொண்ட அணுகுண்டுகள் தயாராக இருப்பதாகவும், இந்தியாவின் எந்த பகுதியையும் அதை கொண்டு தாக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
 

xf



பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது ஏற்கனவே இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் பிரதமர் இம்ரான்கான் அணு ஆயுதத்தை பயன்படுத்தமாட்டோம் எனக் கூறிய அதே நாளில் பாகிஸ்தான் அமைச்சர் ரஷித் அகமது இந்தியாவை 22 ஆக உடைப்போம் எனக் கூறியிருப்பது பாகிஸ்தானின் இரட்டை நிலையை காட்டுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்