இலங்கை அரசை கண்டித்து திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பறிமுதுல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்கக் கோரியும், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியப் போக்கை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் டி.என்.பிரதாபன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் எம்.கஜநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
படம்: அசோக்குமார்