சீனாவில் வுஹான் மாகணத்தில் கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகள் கரோனா வைரஸூக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இருந்த போதிலும் இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கரோனாவுக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அதிவேகமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 443 பேர் உயிரிழந்திருப்பது உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது, முதலில் பெரிய பாதிப்பை சந்தித்த சீனாவை விட அதிகமாகியிருப்பது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சீனாவில் கரோனா தொற்றால் 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 3,434 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.