உலகின் முதல் ஆளில்லா சரக்குவிமானத்தை பயன்படுத்தப்போகும் சீனா!
உலகின் முதல் ஆளில்லா சரக்குவிமானத்தை ஏவப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
ட்ரோன்கள் எனப்படுபவை சிறிய அளவில் உருவாக்கப்பட்டு பலவிதங்களில் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக கண்காணிப்பு, தீயணைப்பு போன்ற சமயங்கள் ஆளில்லா இந்த ட்ரோன்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்.
இந்தவகை ஆளில்லா விமானங்களை சரக்கு பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனா ஆராய்ச்சிக் கழகத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், பலவிதங்களில் உபயோகமாக இருக்கும் எனவும், அடுத்த மாதத்தில் இருந்து அதன் பணிகளைத் தொடங்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரித உணவு நிறுவனமான மெக் டோனல்ட்ஸ் இந்த ட்ரோன் சரக்கு டெலிவரிக்காக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்