சீனாவில் இறந்துபோன உரிமையாளர் உயிருடன் திரும்பி வருவார் என்று எண்ணி நாய் ஒன்று கண்ணீர் மல்க 80 நாட்களாக காத்திருக்கிறது. தற்போது சமூக வலைதளத்தில் அந்த நாய் அந்த பகுதியில் காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அன்று இந்த நாயின் உரிமையாளரான ஹோட், சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவரது உடலுக்கு அருகில் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தது இந்த நாய். அன்றிலிருந்து தற்போதுவரை நாள்தோறும் அந்த பகுதிக்கு வரும் நாய், தனது உரிமையாளர் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையுடன் கடந்த 80 நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு நெகிழ்ந்து போகும் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள், நாய்க்கு உணவளித்து செல்கின்றனர்.
இதை போலவே 1920களில் தனது உரிமையாளர் மறைந்த ரயில் நிலையத்தில் ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்திற்கு சென்றது ஹச்சிகோ என்ற நாய். இந்த ஜப்பானில் அதிக பிரபலமுடையது. ஹச்சிகோவிற்கு ஜப்பானில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.