Skip to main content

இந்தியா, பாகிஸ்தானை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்- சீனா சர்ச்சை கருத்து...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

இந்தியா மற்றும் பாகிஸ்தானை அணு ஆயுத நாடுகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா கூறியுள்ளது.

 

ghjghjghj

 

48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி கூட்டமைப்பில் இந்தியாவை சேர்க்க சீனா வெகுகாலமாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தானை அணுசக்தி வல்லமை வாய்ந்த நாடுகளாக ஏற்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் அளித்த பேட்டியில் "இந்தியா மற்றும் பாகிஸ்தானை அணு ஆயுத நாடுகளாக சீனா ஒருபோதும் ஏற்காது. இந்த நிலைப்பாட்டை எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டோம். அதுபோல வடகொரியாவையும் அணு ஆயுத வல்லமை மிக்க நாடாக ஏற்க மாட்டோம்" என கூறினார். சீனாவின் இந்த பேச்சு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் எதிர்ப்பை பெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்