கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கு மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 85 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வரலாறு காணாத காட்டுத்தீ அப்பகுதியை ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீ கலிஃபோர்னியா காடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக கடந்த ஏழு நாட்களில் சுமார் 78,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 85 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வனப்பகுதியில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இந்த தீயினை அணைக்க 560க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.