Published on 31/03/2021 | Edited on 31/03/2021
உலகம் முழுவதும் கரோனா தாக்குதல் அடுத்த ஆட்டத்தை ஆட துவங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவை ஓவர்டேக் செய்து, கரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று (30.03.2021) ஒரே நாளில் 3,668 பேர் கரோனா காரணமாக மரணமடைந்துள்ளார்கள்.
இதுவரை அந்நாட்டில் 1,26,64,058 பேர் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 1,10,74,483 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,936 ஆக இருக்கிறது. 12,71,639 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரேசிலில் கரோனா தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.