பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தபோது தனக்கு சிகிச்சையளித்து மருத்துவர்களின் பெயரைத் தனது குழந்தைக்குச் சூட்டியுள்ளார்.
55 வயதான போரிஸ் ஜான்சன், அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து தேர்தல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு லண்டன் மேயர் தேர்தலில் தனக்காகப் பிரசாரம் செய்த கேரி சைமண்ட்ஸ் (31) என்பவரைச் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார். ஏற்கனவே இருமுறை திருமணமான போரிஸ் ஜான்சன், முதல் இரண்டு மனைவிகளிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் கேரியை விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் திடீரென கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட அவர், புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குள் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய அவர், மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில் கேரிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்களின் பெயரைச் சேர்த்து, வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் எனத் தனது குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளார் போரிஸ் ஜான்சன்.