பியானோ இசையை இசைக்க அதை கேட்டு தன்னை மெய்மறந்து தும்பிக்கை உடல் தலை என்று அனைத்தையும் ஆட்டி கவனிக்கிறது தாய்லாந்தைச் சேர்ந்த பார்வையற்ற யானை, லாம் டுயான். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
லாம் டுயான், தற்போது யானைகள் உலகம் என்று சொல்லப்படும் தாய்லந்து யானை பண்ணையில் இருக்கிறது. தன்னுடைய 20 வயதுவரை சுமைத்தூக்க மட்டும் பயன்படுத்தப்பட்ட இந்த யானை, தற்போது 62 வயதை தொட்டிருக்கிறது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால், யானைகள் பராமரிப்பு முகமால் பார்க்கப்பட்டு வருகிறது.
பியானோ இசையை இசைத்த பார்டன் கூறுகையில், நான் இந்த பண்ணைக்கு 2012 ஆம் ஆண்டு வந்து பார்த்தபோது லாம் மிகவும் கோபத்துடனும், படபடப்புடனும் இருந்தது. இசையை கேட்டால் மட்டும் சாந்தமாகி இசையை கவனித்தது.
தற்போது லாம் இந்த இசையை கேட்பது போன்ற வீடியோவை, தாய் லாந்தில் இருக்கும் இந்த elephant world பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்த பார்டன் யு ட்யூபில் பதிவேற்றியுள்ளார்.