Skip to main content

வங்காளதேசம்: ஜவுளி ஆலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்

Published on 21/09/2017 | Edited on 21/09/2017
வங்காளதேசம்: ஜவுளி ஆலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்

வங்ககாளதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்ம்குடார்பூர் பகுதியில் பிரபல ஜவுளி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ரசாயன பேரல்கள் சேமித்து வைத்திருக்கும் பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ, மற்ற பகுதிகளையும் பதம்பார்த்தது. தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சிக்கி, 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், அங்கு வேலை செய்துகொண்டிருந்த மேலும் சிலரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக ஜவுளி ஆலையின் பொது மேலாளர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்