ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர். பாஜக பிரமுகரான இவர் 'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி பி.ஜே.பி' எனும் பாஜகவின் வெளிநாட்டு உறுப்பினர்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர் சுயநினைவில்லாமல் போதையில் இருந்துள்ளனர். அந்த விடீயோக்களில் இருந்தவர்களில் பெரும்பாலும் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்களாக இருக்கும் என போலீசார் கருதினர். இது மட்டுமின்றி பாலேஷ் தன்கர் மீது ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக ம குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு சிட்னி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார். இணையதளம் மூலம் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 கொரிய பெண்களை தாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வரும் கொரிய பெண்களை தன்னுடைய பாலியல் இசைக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண்களுக்கு மது அல்லது ஐஸ் கிரீமில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இது குறித்து இவரிடம் தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கை அறையில் உள்ள கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளையும், தன்னுடன் ஒத்துழைக்காத பெண்களை தாக்கும் காட்சிகளையும் அந்த கேமிரா மூலம் பதிவு செய்துள்ளார். இதன் பதிவுகளை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.