Skip to main content

சிரியாவில் மீண்டும் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 17 பேர்பலி !! தொடர்ந்து பதற்றம் !!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
siriya

 

 

 

தென்மேற்கு சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

 

தென்மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டெர்ரா நகரத்தின் கிழக்கு பகுதியில் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வான்வழி தாக்குதலை நடத்தியது முசய்பிரா எனும் ரஷ்ய குண்டுவீசும் விமானம் என்று அடையாளம் காணப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

 

இந்த தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் இறந்துள்ளனர். இந்த திடீர் வான்வழி தாக்குதலால் அந்த பகுதில் பதற்றம் நீடித்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்; 6 பேர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Assault on Sub-Inspector of Police; 6 people arrested

விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியில் கோவிலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதனை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை அங்கு இருந்த சிலர் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  இருதரப்பு மோதலை தடுக்க முயன்றார். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதோடு அவரது சட்டையையும் கிழித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை அழைத்துச் சென்று செஞ்சி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் அதிகாரியை தாக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.