அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து அர்ஜென்டினாவுக்கும் இஸ்ரேலுக்கும் நடக்க இருந்த நட்பு ரீதியான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அடுத்த வாரம் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக அர்ஜென்டினாவும் இஸ்ரேலும் நட்பு ரீதியாக சனிக்கிழமை விளையாட இருந்தது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே தற்போது பிரச்சனைகள் கலவரங்களாக மாறி இருநாட்டு எல்லைகளிலும் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. அதனால் ஜெருசலேமில் நடக்க இருக்கும் இந்த போட்டியில் அர்ஜென்டினா கலந்துகொள்ள கூடாது என்று பாலஸ்தீனியர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. இதனால் சனிக்கிழமை நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதலில் இருந்து காசா எல்லைப்பகுதியில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்து வருகிறது. தற்போதுவரை நூறுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.