இந்தியர்கள் இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை என்ற அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா சீனா ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை எனும் புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, இந்தியா, ரஷ்யா, சீனா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளை சேர்ந்த பயணிகள் 5 மாதங்களுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டம் சோதனை முயற்சியாக அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் 7 நாடுகளுக்கு நிரந்தரமாக விசா தேவையில்லை என்ற அறிவிப்பை இலங்கை அரசு தெரிவிக்கவுள்ளது என்றார். அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.