நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போட்டோ ரிக்கோ தீவுக்கு அட்லஸ் ஏர் 95 என்ற விமானம் நேற்று இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டது. அப்போது அந்த விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கிய உடனே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த நிலையில் சுதாரித்துக்கொண்ட விமானி, அட்லஸ் ஏர் 95 விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் தீயை அணைத்தனர். சரக்கு பொருட்களை இந்த விமானம் ஏற்றிச் சென்றதாகவும், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்தது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.