ஆஸ்திரேலியாவில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதிக்கு அருகில் உள்ள டோலான் என்ற கிராமத்திற்கு மேலே இரண்டு சிறிய ரக விமானங்கள் இன்று பயிற்சி மேற்கொண்டன. தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த அந்த விமானங்கள் எதிர்பாராத வகையில் ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் விமானத்தில் சிக்கியிருந்தர்களை மீட்டார்கள். விபத்துக்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று ஒரு சம்பவம் கடந்தவாரம் நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.