Skip to main content

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அபுதாபி கிளை சார்பில், இன்று (15.09.2017) காலை, அபுதாபியில், தமிழர் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அபுதாபி - பனியாஸ், முஸ்த்தப்பா உழைப்பாளி கிராமத்தில், தமிழ்நாட்டிலிருந்து அபுதாபி சென்று பணிபுரியும் தமிழர்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் செயலாளர் தோழர் கார்த்திக் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தோழர் ருபன் கினிஸ்ட்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய அரசே! தமிழர் இன உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வைக் கைவிடு! தமிழினத்தை வஞ்சிக்காதே! என்ற முழக்கமிட்டனர். நீட்டுக்கு எதிராக உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது.
 
- இரா.பகத்சிங்                       
 

சார்ந்த செய்திகள்