Skip to main content

பூமியை கடந்து செல்லும் டிசி4 விண்கல்லால், ஆபத்து இல்லை விஞ்ஞானிகள் விளக்கம்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
பூமியை கடந்து செல்லும் டிசி4 விண்கல்லால், 
ஆபத்து இல்லை விஞ்ஞானிகள் விளக்கம்

விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் டிசி4 என்ற விண்கல், பூமியை கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

15 முதல் 30 மீட்டர் வரை அகலம் கொண்ட விண்கல் ஒன்று, விண்வெளியில் சுற்றிவருவதை விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர். டிசி4 என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல், 2012-ஆம் ஆண்டு அன்டார்டிகாவுக்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது. இந்த நிலையில், அந்த விண்கல் மீண்டும் 2017-ஆம் ஆண்டு பூமியை நெருங்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துக் கூறியிருந்தனர். அதன்படி, டிசி4 விண்கல் நேற்று பூமியை மிக நெருக்கத்தில் கடந்து சென்றலும். அந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்