இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழல் குறித்து நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழல் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கைவைக்கப்பட்ட நிலையில் இலங்கை சபாநாயகர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிலையில் நாளையும், நாளை மறுநாளும் இதுகுறித்த ஆலோசனை நடைபெற உள்ளது.