Skip to main content

உக்ரைனுக்கு மேலும் ரூபாய் 1,500 கோடி நிதி - அமெரிக்க அதிபர் ஒப்புதல்!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

1,500 crore more funding for Ukraine - US President approves!

 

ஆயுதங்களை வாங்குவதற்காக உக்ரைன் நாட்டிற்கு மேலும் ரூபாய் 1,500 கோடி நிதி அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

 

உக்ரைன் நாடு ராணுவ ரீதியில் வலிமையடைய, அமெரிக்கா கடந்த 13 மாதங்களாகத் தொடர்ந்து உதவி அளித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் நிதியைக் கொண்டு போர் விமானங்கள், ஆயுதங்கள், போர் தளவாடங்களை உக்ரைன் அரசு வாங்கிக் குவித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு நான்காவது கட்ட உதவியாக 200 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூபாய் 1,500 கோடி வழங்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

 

இதைக் கொண்டு, உக்ரைன் உடனடியாக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை  நான்கு கட்டங்களாக உக்ரைன் நாட்டிற்கு ரூபாய் 9,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

 

ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் படையினர் சமாளிப்பதற்கு அமெரிக்கா அளித்த நிதியுதவி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்