ஆப்ரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் ஆப்ரிக்காவின் நைஜீரியா மற்றும் சோமாலியவை சேர்ந்த மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு வெளியிரும் சம்பவம் அதிகரித்துள்ளது. இப்படி அகதிகளாக சொந்த இடங்களை விட்டு பிழைப்புதேடிவரும் மக்களை விரட்டிவிடும் போக்கை ஐநாவின் மனித உரிமை ஆணையம் வன்மையாக கண்டித்துள்ளது.
அண்மையில் நடந்து வரும் ஆப்ரிக்க உள்நாட்டு போரினால் நைஜீரியா மற்றும் சோமாலியவை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அப்படி இருக்க அண்மையில் அகதிகளாக சென்ற மக்களில் 13 ஆயிரம் பேரை அல்ஜீரியா அரசு நாட்டிற்குள் புகவிடாமல் சஹாரா பாலைவனத்திற்கு விரட்டியடித்துள்ளது. பாலைவனத்தில் விரட்டிக்கப்ட்ட அகதிமக்கள் குடியிருப்பு வசதிகள் உணவு போன்ற எந்த அடிப்படை வசதிகளுமின்றி வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் என ஏராளமானோர் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றனர்.
அல்ஜீரிய அரசின் இந்த மனிதன்மையற்ற போக்கை ஐநா மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பிரித்துவைக்கும் ட்ரம்பின் நடவடிக்கைக்கும் ஐநா மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பல சர்வதேச எதிர்ப்புகள் அமெரிக்காவிற்கு குவிய டிரம்ப் குழந்தைகளை பிரித்துவைக்கும் கொள்கையை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.