திருச்சி தென்னுார் விவேகானந்தர் சாலை, மேட்டுத்தெருவில் பிரபு என்கிற பிரபாகரனை பொதுமக்கள் முன்னிலையில் பலர் பார்க்க தென்னுார் புத்து மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜா, தினேஷ்குமார், பாண்டியராஜன் ஆகியோர் கொலை செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி அளித்த தீர்ப்பில் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தடுக்க சென்றவரை வெட்டியதால் தினேஷ்குமாருக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதனைக் கட்ட தவறினால், மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.