Skip to main content

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞரை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கோவை பெண்

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

 

கோவை துடியலூர் அருகிலுள்ள பன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம் – கலாவதி ஆகியோரின் மகள் வித்யபிரபா (வயது 28). கோவையில் கணிப்பொறியியல் படித்துவிட்டு ஜெர்மணி நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜெர்மணி நாட்டை சேர்ந்த ஷீல்டஸ் என்பவரின் மகன் மைக்கேல் ஷீல்டஸ் (வயது 29). இவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவர்கள் இருவருக்குமிடையே அறிமுகமாகி நட்பு மலர்ந்தது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. 

 

Marriage



இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் தங்கள் வீட்டாரிடம் பேசி சம்மதத்தைப் பெற்றனர். மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தது. 


 

திருமணத்தின் போது மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினர் வரமுடியாததால். வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ் பார்வதி ஆகியோர் மனமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளைச் செய்தனர். பாதபூஜை செய்தல், மலர் வாழ்த்துதல், மாலை மாத்துதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த திருமணத்திற்கு ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டஸ் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களும் திருமண விழாவின் போது தமிழ்க் கலாச்சார உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.




 

சார்ந்த செய்திகள்