சென்னையில் அரசுப் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு!
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க, தமிழக அரசு பயிற்சியில்லாத ஓட்டுனர்களை வைத்து வீம்புக்காக பேருந்துகளை இயக்குகிறது. தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே பேருந்துகள் கவிழ்வதும், விபத்துகளுக்காளவதும் தொடர்கிறது.
இந்நிலையில் இன்று விருத்தாசலத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதேப்போல், சென்னையில் மாநகரப்பேருந்து மீது இருச்சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையை சேர்ந்த அஜீத்குமார் (18) என்ற இளைஞர் இரு சக்கரவாகனத்தில் சாந்தோம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி மாநகரப்பேருந்தில் மோதி விபத்தில் சிக்கினர். இதில் அஜீத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.