தடைச் செயயப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அனாசலி என்ற கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அவற்றையும் சோதனை செய்தனர். இதையடுத்து, தடைச் செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மாணவர் அனாசலியை கைது செய்தனர்.
ஆம்பூரில் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கும், வெடிக்குண்டு தாக்குதலுக்கும் திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. கல்லூரி அனாசலி மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.