Skip to main content

எமன் சாலையில் வரும் எடப்பாடியை மறிக்க இருந்த பொதுமக்கள்: சமாதானப்படுத்திய அதிகாரிகள்!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
எமன் சாலையில் வரும் எடப்பாடியை மறிக்க இருந்த பொதுமக்கள்: சமாதானப்படுத்திய அதிகாரிகள்!



திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையை தான் இந்த பகுதி மக்கள் எமன் சாலை என்று வர்ணிக்கிறார்கள்.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று மாலை 3.00 கரூர் திருமாலையூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்து அங்கியிருந்து குளித்தலை வழியே கார் மூலம் கரூர் செல்கிறார்.

இந்த வழியே செல்லும் தமிழக முதல்வரை தான் இந்த பகுதி மக்கள் தான் எடப்பாடி வரும் போது நாங்கள் மறிப்போம் என்று சாலை மறியல் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் எல்லோரும் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திற்கு அனைவரையும் வரவழைத்து ஆர்.டி.ஓ. தலைமையில் சமாத பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்கள் சொன்ன கோரிக்கைகளை அனைத்தை உடனே நிறைவேற்றி தருகிறோம் என தாரள வாக்குறுதி கொடுத்து மக்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

போராட்டம் அறிவித்த குழுவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யராப்பன் நம்மிடம் கூறியதாவது,

இந்த பகுதியில் தொடர்ச்சியாக சாலை விபத்தில் நூற்றுக்கு மேல் இறந்து கொண்டிருக்கிறார்கள். திருச்சியிலிருந்து முக்கொம்பு வரை உள்ள 12 கிலோமீட்டர் சாலையில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 18 பேர் சாலை விபத்திலே இறந்து விட்டார்கள். இந்த சாலைகள் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்து செல்லும் இந்த சாலை வெறும் 18 அடி அகலம் மட்டுமே உள்ளது. இதில் இரவிலும் பகலிலும் மணல் லாரிகள் வேறு நிற்கிறது. இதனால் இங்கு சாலைகள் புதிதாக அமைக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையாக வைத்துக்கொண்டே இருக்கிறோம். மக்கள் இறந்து போவதை பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாத இந்த தமிழக அரசு முதல்வர் வருகிறார் என்றவுடன் பழைய சாலைகளுக்கு எல்லாம் பாலீஷ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 20 க்கு மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி விபத்து பகுதி என்பதால் நிரந்தரமாக 108 ஆம்புலேன்ஸ் இங்கே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மிக குறுகலான சாலையில் வாகன சோதனை நடத்துவதாலயே பல விபத்துகள் நடக்கிறது. இந்த சாலையில் மின் விளக்கு என்பதே கிடையாது. பெட்டாவாய்தலை முதல் அந்தநல்லூர் வரை படித்துறை விரிவாக்கம் என்கிற பெயரில் இங்கு இருந்த மரங்களை எல்லாம் அகற்றி விட்டனர். மீண்டும் மர நட வேண்டும் என்றும் குடமுருட்டி முதல் அந்தநல்லூர் வரை சென்டர்மீடியேடட் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்தோம் கடைசி வரை காது கொடுத்துக்கூட கேட்க வில்லை என்பதால் தான் முதல்வர் வரும் போது அனைத்து கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்லோரும் சேர்ந்து சாலையை மறிப்போம் என்று அறிவிப்பு கொடுத்தோம்.



ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஜீயபுரம் காவல் துணைகண்காணிப்பாளர், சார்பு ஆய்வாளர், தேசிய நெடுஞ்சாலைதுறையினர், பொதுபணித்துறையினர் ,ஆகியோர் அரசு நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றிய அனைத்து கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும். என்றும் 6 கோடிக்கு புதிய பாலம் கட்டவும், 30 கோடிக்கு சென்டர்மீடியேட் அமைக்க திட்டமதிப்பீடு அனுப்பபட்டுள்ளது என்று பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட இருந்த மக்களை சமாதப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்